உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லேப்டாப் மாடல் மாற்றி அனுப்பியதால் இழப்பீடு

லேப்டாப் மாடல் மாற்றி அனுப்பியதால் இழப்பீடு

கோவை; கோவை, பி.என்.புதுாரை சேர்ந்த பூவேந்தன் என்பவர், அமேசானில், கடந்த 2023, நவ., 25 ல், லேப்டாப் ஆர்டர் கொடுத்தார். இதற்காக,53,490 ரூபாய் செலுத்தினார். ஆனால், அவர் கேட்ட மாடலுக்கு பதிலாக, 42,000ரூபாய் மதிப்புள்ள வேறு மாடல் அனுப்பினர். அதை வாங்காமல், ஏற்கனவே செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது கால தாமதம் செய்தனர். இழப்பீடு கேட்டு, வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''அமேசான் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், லேப்டாப்பிற்காக பெற்ற தொகையை திருப்பி கொடுப்பதோடு, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி