உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போட்டி

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போட்டி

கோவை : மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக, போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சூழல் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சிக்காக மாவட்டத்தில் உள்ள, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிர் கண்டுபிடித்தல், பலுான் விளையாட்டு உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற, 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வட்டார அளவிலான போட்டிகள் ராஜவீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள, பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடந்தன. போட்டியை, கோவை நகர வள மைய மேற்பார்வையாளர் சிவராமன் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் தேசிங்கு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியர், பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை