உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரி செலுத்தலைனா ஜப்தி; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

வரி செலுத்தலைனா ஜப்தி; நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

வால்பாறை; வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக செலுத்தாவிட்டால், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.வால்பாறை நகராட்சியில், வரி வசூல் செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும், 65 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தியுள்ளனர். சொத்துவரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்கள் செலுத்தப்படவில்லை.இது குறித்து, நகராட்சி கமிஷனர் ரகுராமன் கூறியதாவது:வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட வரியினங்களை, நகராட்சி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில், கடைகள் பூட்டி 'சீல்' வைப்பதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். மேலும் நீதிமன்ற நடவடிக்கை வாயிலாக, ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை உடனடியாக செலுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி