மேலும் செய்திகள்
பாலிசிதாரருக்கு இழப்பீடு தர உத்தரவு
26-Dec-2024
கோவை; கோவை வடவள்ளி, இடையர்பாளையத்தை சேர்ந்த சவுந்தர ராஜன் என்பவர், வீட்டின் முதல் தளத்தில், அறைகள் கட்டுவதற்கு, விளாங்குறிச்சி லதா அசோசியேட்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அதற்கான பணத்தையும் செலுத்தினார். ஆனால், பணிகளை முழுமையாக முடிக்காமல், கட்டடத்தை ஒப்படைத்தனர். இதனால் மழை காலங்களில், தண்ணீர் கசிந்து சுவர் சேதம் அடைந்தது. இதனால் சவுந்திரராஜனுக்கு கூடுதலாக, ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்வேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ரூ.7.02 லட்சம் வழங்க வேண்டும், இழப்பீடாக, 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
26-Dec-2024