உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பஸ்சுக்குள் புகுந்த கட்டுமான கம்பிகள்!

 பஸ்சுக்குள் புகுந்த கட்டுமான கம்பிகள்!

கவுண்டம்பாளையம்: கவுண்டம்பாளையத்தில் நடந்த விபத்தில், கான்கிரீட் இரும்பு கம்பிகள் பஸ்சுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் -- கோவை ரோட்டில், நல்லாம்பாளையம் பிரிவு அருகே, நேற்று காலை டவுன் பஸ் ஒன்று, கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னால், கான்கிரீட்டுக்கான இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வந்து கொண்டிருந்த பஸ், கான்கிரீட் கம்பிகள் இருந்த வேனின் பின்பகுதியில் மோதியது. இதில், வேனின் பின்பக்கம் இருந்த கான்கிரீட் இரும்பு கம்பிகள், பஸ் கண்ணாடியின் முன்பக்கத்தை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்தது. நல்வாய்ப்பாக பஸ்சுக்குள் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை