உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

நெகமம்; நெகமம் அருகே காட்டம்பட்டி பகுதியில் கட்டட தொழில் செய்யும் போது, மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார்.கோவை, சூலூரை சேர்ந்தவர் மகேந்திரன், 35, கட்டட தொழிலாளி. இவர், நேற்று காட்டம்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் கட்டட பூச்சு வேலை செய்தார்.அப்போது, இவரின் கையில் இருந்த, 6 அடி நீளம் உள்ள இரும்பு பைப் தவறுதலாக மின்கம்பத்தின் மீது உரசியதில், மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ