ஓட்டு சாவடிகள் சீரமைப்பு கட்சிகளுடன் ஆலோசனை
கோவை; வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் ஓட்டு சாவடிகள் சீரமைப்பு தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பதிவு அலுவலர்களால் இறுதி செய்யப்பட்ட சாவடிகளின் பட்டியல் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. கோவைமாவட்டத்தில் உள்ள, 1,200க்கு மேல் வாக்காளர்களை கொண்ட சாவடிகள்,புதிதாக உருவாக்க உள்ள சாவடிகள், இடமாற்றம் செய்ய உள்ளவை, பெயர் மாற்றம் செய்யப்படுபவை, கட்டட மாற்றம் செய்யப்படுபவை ஆகியன குறித்து சட்டசபைதொகுதி வாரியாக விவரிக்கப்பட்டது. கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, மாநகராட்சி துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா, தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகைவேல், வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.