மேலும் செய்திகள்
என்.ஜி.பி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
10-Jan-2025
கோவை : குரும்பபாளையம், ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அவர் பேசுகையில், ''கிராமப்புற மாணவர்கள் தங்கள் கல்வியால் உழைத்து முன்னேற வேண்டும். வாழ்வில் உயர்வு அடைவதுடன், மனித நேயத்துடனும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனித நேயமே நல்ல சமுதாயத்தை உருவாக்கும்,'' என்றார்.தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். கல்லுாரி முதல்வர் அனுஜா, தாளாளர் சுகுமாரன், பேராசிரியர்கள், பெற்றோர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
10-Jan-2025