மேலும் செய்திகள்
இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
10-Jan-2025
ஆனைமலை; ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தர கொப்பரை, 48 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 141.52 ரூபாய் முதல், 143.52 ரூபாய் வரை விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 58 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 105.11 முதல், 127.54 ரூபாய் வரை விலை கிடைத்தது.மொத்தம்,106 கொப்பரை மூட்டைகளை, 21 விவசாயிகள் கொண்டு வந்தனர்; ஒன்பது வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.தேங்காய் வரத்து சரிந்துள்ளதால், கொப்பரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், கொப்பரைக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை உயர்ந்து வருவதால், விவாசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த வாரம், 6.01 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 47.70 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
10-Jan-2025