உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை படிப்புகளில் சேர கவுன்சிலிங் நாளை துவக்கம்

வேளாண் பல்கலை படிப்புகளில் சேர கவுன்சிலிங் நாளை துவக்கம்

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் 6,921 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக 30,333 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், நாளை துவங்கிவரும் 15ம் தேதி வரை, ஆன்லைன் வாயிலாக நடக்கிறது.வரும் 14ம் தேதி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங், நேரடி முறையில் நடக்கிறது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சேர்க்கை உறுதி 4 கட்டங்களாக நடக்கிறது. வரும் 19ம் தேதி, முதல் கட்டமாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. வரும் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை, பொதுப் பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.2ம் கட்ட சரிபார்ப்பு வரும் 29ம் தேதி துவங்கி, 4ம் கட்டம் வரும் ஆக., 21ம் தேதி நிறைவடைகிறது.கல்லூரிகள் வரும் செப்., 3ம் தேதி துவங்குகின்றன. செப்., 8ம் தேதிக்குப் பிறகு, நேரடி சேர்க்கை துவங்கும். கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகளில் தேவைப்படும் பட்சத்தில் மாறுதல் செய்யப்படும்.இத்தகவலை, பல்கலையின் வேளாண்மை மற்றும் மாணவர் சேர்க்கைக்கான டீன் வெங்கடேச பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை