உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நாளை வரை நடக்கிறது கவுன்சிலிங்

அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நாளை வரை நடக்கிறது கவுன்சிலிங்

கோவை; அரசு கலைக் கல்லுாரிகளில் முதற்கட்ட கவுன்சிலிங்கின் தொடர்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த 7ம் தேதி முதல் 29 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கோவை அரசு கலை கல்லுாரியில் சேர மொத்தம், 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கோவை புலியகுளம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரியில் உள்ள, 410 இடங்களில் சேர, 10 ஆயிரத்து, 723 பேர் விண்ணப்பித்திருந்தனர்.தரவரிசை வெளியிடப்பட்ட நிலையில், கடந்த, 2ம் தேதி முதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் முடிந்த நிலையில், பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், 4, 5ம் தேதிகளில் நடந்தது.இந்நிலையில், முதற்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சி, இன்றும் நாளையும் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களுக்கு, 240 - 269 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம்.நாளை, தமிழ் பாடத்துக்கு, பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவில், 55 - 74 வரை கட் ஆப் பெற்றவர்களுக்கும், ஆங்கிலப் பாடத்துக்கு, 50 - 59 வரை கட்ஆப் பெற்றவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை