உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகாராஷ்டிராவில் ரூ.320 கோடி மதிப்பிலான ஆர்டர் பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்ஸ்

மகாராஷ்டிராவில் ரூ.320 கோடி மதிப்பிலான ஆர்டர் பெற்ற சி.ஆர்.ஐ., பம்ப்ஸ்

பு துப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கப்படும் நீர் தீர்வுகளில் முன்னோடியான சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான சி.ஆர்.ஐ. சோலார், மாகேல் தியலா சவுர் கிருஷி பம்ப் யோஜனாவின் கீழ் ரூ.320 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் வழங்கிய இந்த லெட்டர் ஆப் எம்பேனல்மென்ட் படி, 3 ஹெச்.பி., 5 ஹெச்.பி., மற்றும் 7.5 ஹெச்.பி.,திறன் கொண்ட 10,714 ஆப்-கிரிட் டிசி சோலார் போட்டோவோல்டாயிக் வாட்டர் பம்பிங் சிஸ்டம்களை வடிவமைத்தல், வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை சி.ஆர்.ஐ., சோலார் மேற்கொள்ளும். இந்த முயற்சியானது,குறைவான மற்றும் மின் இணைப்பு இல்லாத கிராமப்புறப் பகுதிகளில் நம்பகமான நீர் விநியோகத்தை உறுதிசெய்ய உதவும். மேலும், இது பாரம்பரிய எரிசக்தியைச் சார்ந்திருக்கும் நிலையைக் கணிசமாகக் குறைத்து, நீர்ப்பாசனத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற செழிப்பை அதிகரிப்பதற்கும் உதவும். இந்த முக்கிய மைல்கல் குறித்து சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ரூ.320 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம். ஒரு வணிக சாதனை என்பதை விட, இந்தியாவின் விவசாயிகளுக்கு துாய்மையான, நம்பகமான மற்றும் நிலையான நீர் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்தும் ஒரு லட்சிய நோக்குடைய முன்னெடுப்பாகும். மகாராஷ்டிராவுடன் இணைந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரைவுபடுத்துவதிலும், அதன் பொருளாதாரத்திற்கு முக்கியமாக விளங்கும் விவசாயத்திற்கு நம்பகமான நீர்பாசனத்தை வழங்குவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம். என்றார். இந்தியாவின் எரிசக்தி திறன்மிக்க மற்றும் நிலைத்தன்மை உடைய நீர் உள்கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தை சி.ஆர்.ஐ. தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஐ.ஓ.டி.,செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கண்காணிப்பு தீர்வுகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் 1,81,000க்கும் மேற்பட்ட சோலார் பம்பிங் சிஸ்டம்களை இந்நிறுவனம் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை