உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோலார் பம்ப்பிங் சிஸ்டம் ரூ.210 கோடியில் நிறுவும் சி.ஆர்.ஐ.,

சோலார் பம்ப்பிங் சிஸ்டம் ரூ.210 கோடியில் நிறுவும் சி.ஆர்.ஐ.,

கோவை; சி.ஆர்.ஐ., பம்புகள் குழுமத்தின் அங்கமான சி.ஆர்.ஐ., சோலார் நிறுவனம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் எரிசக்தி மேம்பாட்டு நிறுவனங்கள், ஹரியானா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து ஆர்டர்கள் பெற்றுள்ளது. ரூ.210 கோடியில் மேற்கண்ட மாநிலங்களில், 6,894 சோலார் பம்ப்பிங் சிஸ்டம்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து சி.ஆர்.ஐ., குழும தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது: விவசாய நிலங்களில் நிலையான நீர்ப்பாசன உள்கட்டமைப்பை உருவாக்க, இந்த உயர்மதிப்புள்ள ஆர்டர்கள் உதவிகரமாக இருக்கும். மேற்கண்ட திட்டங்கள் கிராமப்புற உள்கட்டமைப்பை மட்டுமல்ல, கிராமப்புற வளர்ச்சி, எரிசக்தி துறை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும்.இந்தியா முழுவதும் ஐ.ஒ.டி., செயலாக்கப்பட்ட ஸ்மார்ட் வசதிகளுடன் கூடிய, 1.81 லட்சம் சோலார் பம்ப்பிங் சிஸ்டம்களை சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவியுள்ளது. இம்முயற்சியின் மூலமாக, 6,100 மில்லியன் யூனிட்டுகள் கிலோவாட் மின்சாரம் சேமிப்பதற்கு பங்களித்துள்ளது. மேலும், 4.80 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு மாசுவை குறைக்க உதவியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ