மேலும் செய்திகள்
ஒரு டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது
28-Oct-2026
புகையிலைப் பொருட்கள் பதுக்கியவர் சிறையிலடைப்பு மதுக்கரை : சுந்தராபுரம் போலீசாருக்கு மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவற்றை பதுக்கிய எம்.ஜி.ஆர்.நகரில் தங்கியுள்ள புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் ராஜ்குமாரை, 39 சிறையில் அடைத்தனர். 183.85 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. * சிங்காநல்லுார் போலீசார் புகையிலைப் பொருட்கள் பதுக்கிய மதுரை வண்டியூர் சவரிமுத்துவை, 55 கைது செய்தனர். 2.385 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடங்களில் மது குடித்த 10 பேர் கைது கோவை: பொது இடங்களில் மது குடிப்பவர்களால் பல பிரச்னைகள் எழுவதாக புகார்கள் வந்தன. போலீசார் கண்காணித்து நேற்று ஒரே நாளில், மாநகர எல்லைக்குட்பட்ட 7 போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் 10 பேரை கைது செய்து வழக்கு பதிந்தனர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
28-Oct-2026