மேலும் செய்திகள்
பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
24-Sep-2025
கோவை மாவட்டம், காரமடை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சஞ்சய் குமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கமலக்கண்ணன், 21, ஜாமினில் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் காலை நண்பர் விக்னேஸ்வரனுடன் மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட் சென்று திரும்பினார். மேட்டுப்பாளையம் ரோடு, மத்தம்பாளையம் பேக்கரி அருகே வந்தபோது விக்னேஸ்வரனையும், கமலக்கண்ணனையும் சஞ்சய் குமாரின் உறவினர் மற்றும் நண்பர்கள் அரிவாளால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தினர். விக்னேஸ்வரன் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக குட்டி என்கிற அரவிந்தன், 24, பிரகாஷ், 25, குழந்தை என்கிற கிருஷ்ணராஜ், 45, சுந்தர்ராஜ், 51, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் சஞ்சய் குமார் கொலை தொடர்பாக பழிவாங்கும் எண்ணத்துடன் கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் விக்னேஸ்வரன் ஆகியோரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. மேலும், அவர்களிடமிருந்து கத்தியை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக முகமது சபீர்,23, என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கூலி தொழிலாளியை கொன்ற இருவர் கைது
மேட்டுப்பாளையம் அறிவொளி நகரை சேர்ந்தவர் குணா, 23, கூலி தொழிலாளி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் ஒன்றாக மது அருந்தி உள்ளார். பின் எம்.எஸ்.ஆர்.புரத்தில் அவரது அப்பா வீட்டிற்கு செல்ல மேட்டுப்பாளையத்தில் இருந்து அண்ணாஜிராவ் ரோடு அருகே செல்லும்போது மது போதை அதிகமானதால் அவரால் நடக்க முடியவில்லை. இதையடுத்து அங்குள்ள கடை முன் உட்கார்ந்து இருந்தபோது, குணாவிற்கு தெரிந்த அறிவொளி நகரை சேர்ந்த கூலி தொழிலாளிகளான சரவணன், 33, மற்றும் பாபு, 36, ஆகிய இருவரும் அங்கு வந்துள்ளனர். குணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் தராததால், குணாவின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுக்க இருவரும் முயற்சி செய்துள்ளனர். முடியவில்லை என்ற ஆத்திரத்தில் பாபு மற்றும் சரவணன் ஆகியோர் குணாவை கீழே தள்ளி கால்களால் மிதித்து அவரது செல்போனை பறித்து சென்றனர். இதில் குணா உயிரிழந்தார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பாபு, சரவணனை நேற்று முன் தினம் கைது செய்தனர். தங்க செயின் பறித்தவர் கைது
சூலூர் அடுத்த பீடம்பள்ளியை சேர்ந்தவர் சம்பூர்ணா, 40. இவர் கடந்த, 4 ம்தேதி கடைக்கு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த நபர் செயினை பறித்து சென்றார். இதே போல், மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியை தேடி வந்தனர். கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில், குற்றவாளியை அடையாளம் கண்டனர். கோவை சிட்ரா பகுதியில் அந்நபர் இருப்பது தெரிந்து அங்கு சென்ற போலீசார், அந்நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அந்நபர் ஒடிசாவை சேர்ந்த டபான் குமார் சேத்தி, 27 என்பதும், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் வசிப்பதும் தெரிந்தது. இரு செயின் பறிப்புகளில் ஈடுபட்டதும் தெரிந்தது. நகையை பறிமுதல் செய்த போலீசார்,அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலைநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் நஞ்சம்மாள், 68. இவர் திருமலை நாயக்கன்பாளையம் மயானம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதி, தலையில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதில், பெரியநாயக்கன்பாளையம் புதூர் ரோட்டில் வசிக்கும் கோபி,23, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து மோதியது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Sep-2025