விமான பயணிகளிடம் சுங்கத்துறை விசாரணை
கோவை : கோவையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மூன்று பயணிகளின் உடமைகளில், ரூ.23 லட்சம் மதிப்பிலான, 57 டிரோன்கள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரிந்தது. அவர்களை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள், கடலுாரரை சேர்ந்த பிரபாகரன், திருவாரூரை சேர்ந்த அவினாஷ் ராஜகோபாலன், விழுப்புரத்தை சேர்ந்த பரந்தாமன் எனத் தெரிந்தது. அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.