உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சைக்கிளிங் ; எஸ்.ஆர்.எஸ்.ஐ., மாணவியர் பெற்றனர் பதக்கம் 

சைக்கிளிங் ; எஸ்.ஆர்.எஸ்.ஐ., மாணவியர் பெற்றனர் பதக்கம் 

கோவை;இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் நடந்த டிராக் சைக்கிளிங் போட்டியில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி மாணவியர் பதக்கம் வென்றனர். இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி. எப்.ஐ.,) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான 67வது எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இப்போட்டியில் பங்கேற்ற, தமிழக அணியின் சார்பில் இடம் பிடித்திருந்த எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக்., பள்ளி மாணவியர் சாதனா ஸ்ரீ , 17 வயதுக்கு உட்பட்டோருக்கான டீம் ஸ்பிரின்ட் போட்டியில் தங்கமும், கார்த்தியாயினி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டீம் பெர்ஸ்யூட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தபிதா, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான டீம் ஸ்பிரின்ட் போட்டியில் தங்கம், டைம் டிரையல் போட்டியில் வெள்ளி வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை