உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசாணை பிறப்பித்து ஆறு மாதம் ஆகியும் அமல்படுத்தவில்லை பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் தவிப்பு

அரசாணை பிறப்பித்து ஆறு மாதம் ஆகியும் அமல்படுத்தவில்லை பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் தவிப்பு

அன்னுார், ; பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு, புதிய சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்து, ஆறு மாதம் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை.தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கொள்முதல் செய்யப்படும் பால் ஆவினுக்கு வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி வந்தனர். இதையடுத்து 2023ல் பால் வளத்துறை அமைச்சர், 'பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம்பளம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு அமல்படுத்தப்படும்,' என அறிவித்தார். எனினும் இதுவரை புதிய சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறுகையில், 'பால் கூட்டுறவு சங்கங்கள் நாளொன்றுக்கு, 250 லிட்டர் வரை கொள்முதல் செய்வோர், 251 முதல் 500 லிட்டர் வரை கொள்முதல் செய்வோர், 501 முதல் 750 வரை கொள்முதல் செய்வோர் என ஒன்பது வகையாக பிரிக்கப்பட்டன.இதில் பணியாற்றும் ஊழியர்கள் 11 நிலைகளில் பிரிக்கப்பட்டு, சம்பளம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அமைச்சர் அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.பால் உற்பத்தி துறை இயக்குனர் அரசாணை பிறப்பித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை மறு நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை. அரசு விரைவில் புதிய சம்பளம் வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை