உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலை சேதம்

கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலை சேதம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே, சொக்கனூர் ரோட்டில் இருந்து சங்கராயபுரம் செல்லும் இணைப்பு சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, சொக்கனூர் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த சாலையில் டாஸ்மாக் மதுக்கடை அருகே, சங்கராயபுரம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பெரும்பாலும் விவசாயிகளே பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையில் டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருவதால், சேதம் அடைந்துள்ளது. இது மட்டுமின்றி, மழை பெய்து வருவதால், சாலை கூடுதலாக சேதம் அடைந்துள்ளது.இதனால், இவ்வழியில் செல்லும் விவசாயிகள், வாகனத்தில் விளைபொருட்களை எடுத்து செல்ல சிரமப்படுகின்றனர். இரவு நேர பயணத்தை தவிர்க்கின்றனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி, இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும், என, வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி