மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
04-Jul-2025
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், தரவு பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்துதலில் நடைமுறைப் பயிற்சி நடந்தது.வேளாண் பல்கலைக் கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தகவலியல் துறை, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம் சார்பில், தரவு பகுப்பாய்வு மற்றும் காட்சிபடுத்தலில் நடைமுறைப் பயிற்சி' நடத்து வருகிறது.சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள மூலக்கூறு புற்றுநோயியல் துறை, கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கோஜன் வணிக மற்றும் தொழில்நுட்பப் பள்ளி, தெலுங்கானாவின் கல்லக்கல்லில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையம், கிங் தடுப்பு மருத்துவ நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவர் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலில் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் அருள் வரவேற்று, ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு மற்றும் ஆர் நிரலாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.தோட்டக்கலைத்துறை டீன் வெங்கடேசன், பேராசிரியர் கோயிலா தேவி உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு பயிற்சி நாளை நிறைவடைகிறது.
04-Jul-2025