உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செம்மொழி பூங்காவை சுற்றிப்பார்க்க நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு

செம்மொழி பூங்காவை சுற்றிப்பார்க்க நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு

கோவை : கோவை, காந்திபுரத்தில், 45 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்காவை சுற்றிப்பார்க்க, நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.25, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்க, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை, காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை மைதானத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கு, ரூ.165.25 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பூங்கா பயன்பாட்டுக்கு வந்தபின், பராமரிப்பு பணிக்கு எவ்வளவு ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டது.அதற்கேற்ப எந்தெந்த வழிகளில் வருவாய் ஈட்ட முடியும் என ஆலோசிக்கப்பட்டது. செம்மொழி பூங்காவை சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பது; பன்னாட்டு மைய கட்டடத்தை வாடகைக்கு விடுதல், வாகன நிறுத்துமிடத்தை ஏலத்துக்கு விட்டு வருவாய் ஈட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.25, சிறியவர்களுக்கு ரூ.10, 'வாக்கிங்' செல்வோருக்கு மாதாந்திர கட்டணம் ரூ.100, கேமரா பயன்படுத்த ரூ.25, வீடியோ கேமராவுக்கு ரூ.150, திரைப்பட ஒளிப்பதிவுக்கு நாளொன்றுக்கு ரூ.50 ஆயிரம், குறும்பட ஒளிப்பதிவுக்கு நாளொன்றுக்கு ரூ.3,000 வசூலிக்கலாம் என கட்டணம் விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டு, மாமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்தில், கட்டணம் இறுதி செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி, தமிழக அரசுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றதும், பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது, செயல்பாட்டுக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை