மேலும் செய்திகள்
பறிமுதல் வாகனங்கள் ஏலம்
13-Feb-2026
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள பறிமுதல் வாகனங்களை, ஏலம் விடபோலீசார் முடிவு செய்துள்ளனர். கோவைமாவட்டத்தில் உள்ளபோலீஸ் ஸ்டேஷன்களில்,பல்வேறு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஸ்டேஷன் வளாகங்களில் ஆண்டுகணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், அந்த வாகனங்களை உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ளலாம் என, போலீசார் கூறியுள்ளனர். மேலும்,குற்றவழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை பொது ஏலத்தில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
13-Feb-2026