உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வருகிறார் துணை ஜனாதிபதி: சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு 

கோவை வருகிறார் துணை ஜனாதிபதி: சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு 

கோவை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், வரும் 28ம் தேதி கோவை வருகிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க, பா.ஜ. முடிவு செய்துள்ளது. இது குறித்த கலந்தாலோசனை கூட்டம், கோவை மாவட்ட பா.ஜ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது: துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின், கோவைக்கு முதன் முதலாக வருகை தரும் துணை ஜனாதிபதிக்கு, மேளதாளம் முழங்க பூரணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. பிரம்மாண்ட வாகன பேரணியாக அவர், கோவை கொடிசியா கண்காட்சி அரங்கிற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கு முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். தொழிலதிபர்கள், மாநகர முக்கியஸ்தர்கள் சுமார் 2,000 பேர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பகல் 12:15 மணிக்கு டவுன்ஹால் பகுதியில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். மதியம் சர்க்யூட் ஹவுசில், மதிய உணவு உட்கொண்டு ஓய்வெடுக்கிறார். பகல் 2:30 மணிக்கு, பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு திருப்பூர் செல்கிறார். இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொது செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். பா.ஜ.தேசிய பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை