உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரம்மாண்ட வரவேற்பு நடத்த முடிவு

பிரம்மாண்ட வரவேற்பு நடத்த முடிவு

அன்னுார் : அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை துவக்கி, செயல்படுத்திய, முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு, அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில், பாராட்டு விழா மாநாடு வரும் 9ம் தேதி கஞ்சப்பள்ளியில் நடக்கிறது.இது குறித்த ஆலோசனை கூட்டம் கரியாம்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில், தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்கும் பாராட்டு விழா மாநாடு குறித்து, அனைத்து ஊராட்சிகளிலும் போஸ்டர்கள் ஒட்டுவது, கழகத் தொண்டர்களுக்கு தகவல் தெரிவிப்பது, அன்னுாரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், பேரவை மாவட்ட இணை செயலாளர் சுந்தரம், மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல் குமார், பாசறை மாவட்ட செயலாளர் வசந்த், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை