உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜனநாயக மாதர் சங்கம் மனு

ஜனநாயக மாதர் சங்கம் மனு

கோவை: கோவையில் கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் பின் சங்கத்தின் பொதுச்செயலர் ராதிகா கூறியதாவது: கோவையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டிக்கக்கூடியது. பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். பெண்கள் இதுபோன்ற புகார்களை வெளியில் சொல்ல தேவையான தைரியத்தை, தர வேண்டியது போலீசாரின் கடமை. எந்த இடத்தில் குற்றம் நடந்தாலும், அதற்குரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். பெண்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். பெண்கள், கல்லுாரி மாணவியர், இளம்பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. இதைத்தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை