உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கோவை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், போதை பொருட்களுக்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்கத்தின், மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும், இளைஞர்களையும், மாணவர்களையும் சீரழிக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி, படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாதர் சங்க மாநில நிர்வாகிகள் உஷா, அமிர்தம் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். மாநில குழு உறுப்பினர் அமுதா, மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ரேவதி, ஜீவாமணி, என் புஷ்பலதா உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை