மேலும் செய்திகள்
அரசு அலுவலகங்கள் முன் பதாகை வைத்த ஊழியர்கள்
05-Oct-2024
அன்னுார் : அன்னுாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்டம், நரவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன் என்பவரை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும், என வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.இதன்படி அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்து பேசினார்.கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தாக்குதலில் ஈடுபட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அன்னுார் தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
05-Oct-2024