மேலும் செய்திகள்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
20-Feb-2025
கோவை; சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள் கடந்த, 2009 பிப்., 19ல், போலீசார்- வக்கீல் இடையே மோதல் ஏற்பட்டது. வக்கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, ஆண்டு தோறும் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டு நடவடிக்கை குழு, வேண்டுகோள்படி கருப்பு தினமாக அனுசரித்து, கோவையில் நேற்று, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வக்கீல் சங்கம் சார்பில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய அரசின் வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற கோரியும், வழக்கறிஞர் சேமநல நிதியினை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த கோரியும், கோஷம் எழுப்பினர். இதில், வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார், பார் கவுன்சில் துணை தலைவர் அருணாசலம் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.
20-Feb-2025