உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்க கருத்தரங்கு

தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்க கருத்தரங்கு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குஉட்பட்ட சோமையனூர் கிராமத்தில் பாலமலைஉழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்குதென்னை மரத்தை தாக்கும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த செயல் விளக்கம் தோட்டக்கலை துறை சார்பில் நடந்தது. இதில், வெள்ளை ஈக்களை உயிரியல் மற்றும் அங்கக முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலை துறை வாயிலாக, செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தென்னை வேர் வாடல் நோய், இதர பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துக்கூறினார். பயிற்சியில் பாலமலை உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி