உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அய்யாசாமி மலை ஏறிய பக்தர் மயங்கி உயிரிழப்பு

அய்யாசாமி மலை ஏறிய பக்தர் மயங்கி உயிரிழப்பு

தொண்டாமுத்தூர்: தீத்திபாளையத்தில் உள்ள அய்யாசாமி மலை கோவிலுக்கு சென்ற பக்தர், நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.தீத்திபாளையம், மேற்கு தொடர்ச்சி மலையில், அய்யாசாமி கோவில் உள்ளது. மலைக்கோவில் அமைந்து. இக்கோவிலுக்கு, சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த ராமன்,45 என்பவர், நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் வந்திருந்தார்.மலை மீது உள்ள கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்து விட்டு, அடிவாரத்திற்கு வந்தபோது, ராமனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். அருகிலிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவ பணியாளர், பரிசோதனை செய்தபோது, ராமன் உயிரிழந்தது தெரியவந்தது. பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை