உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓசோன் தின விழா கொண்டாட்டம்

ஓசோன் தின விழா கொண்டாட்டம்

ஆனைமலை : ஆனைமலை அடுத்த சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தமிழாசிரியை பொற்கொடி தலைமை வகித்தார். ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தடுக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் எரித்தல், இரு சக்கர வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அறிவியல் ஆசிரியை சாவித்திரிதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Narayanan
ஆக 12, 2025 15:23

நாராயணசாமி ஐயா நீங்கள் ஆட்சி செய்யும் போது காங்கிரஸ் ஆட்சியை விடுத்து திமுக ஆட்சிசெய்தீர்கள். அவர்களைப்போலவே கொள்ளை செய்தீர்கள் .


முக்கிய வீடியோ