உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலைவாய்ப்பு இணையதளம் பயன்படுத்த முடியாமல் தவிப்பு

வேலைவாய்ப்பு இணையதளம் பயன்படுத்த முடியாமல் தவிப்பு

கோவை:பிரமதரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட இணையதளம் மேம்படுத்தும் பணி துவங்கி, மூன்று மாதங்களாகியும் இன்னும் முடியாததால், இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் மானியத் திட்டத்தில் முக்கியமானது, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம். இதன் வாயிலாக, கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, சுய தொழில் முயற்சிகளை துவங்கவும், புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கவும் உதவுகிறது. இதில், உற்பத்தி மற்றும் சேவை பிரிவு தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, உற்பத்தி பிரிவு தொழிலுக்கு ரூ.50 லட்சம், சேவை பிரிவு தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கீழ் படித்தவர்களுக்கு, உற்பத்தி பிரிவு தொழிலுக்கு ரூ.10 லட்சம், சேவை பிரிவு தொழில்களுக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.தகுதியுள்ள தொழில்முனைவோருக்கு, புதிய குறுந்தொழில்களை அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி, பயனாளியின் வகை மற்றும் இருப்பிடத்துக்கேற்ப, திட்டச் செலவில், 15 சதவீதம் முதல், 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு பிப்., மாதம் இறுதியில், இதன் இணையதளம் புதுப்பிக்கும் பணி துவக்கப்பட்டது. மூன்று மாதங்களாகியும் இதுவரை பணிகள் முடிவடையவில்லை. இத்திட்டத்துக்கு இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும் என்பதால், பயனாளிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ