உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிஜிட்டல் கிராப் சர்வே பணி

டிஜிட்டல் கிராப் சர்வே பணி

கிணத்துக்கடவு ;கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில், 16 ஆயிரம் ஹெக்டேர்க்கு அதிகமாக விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பயிர் சாகுபடியை டிஜிட்டல் முறையில் சர்வே எடுக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், நேற்று, தேவராயபுரம், கிருஷ்ணராயபுரம் மற்றும் செங்குட்டைபாளையம் ஆகிய கிராமங்களில் நடந்த பயிர்கள் சர்வே பணிகளை புதுக்கோட்டை வேளாண் விரிவாக்க பயிற்சி மைய இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார். இதில், கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும், 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிகள் விரைவாக முடித்து, பயிர் சாகுபடி குறித்த துல்லிய புள்ளி விபரங்கள் தொகுக்கப்படும் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி