வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
பொள்ளாச்சி; ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும், திட்டத்தில் பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:மத்திய அரசு ஓய்வூதியர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ராணுவ, இதர ஓய்வூதியர்கள், நவ., 1 முதல் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க கருவூலத்துறை கோரியுள்ளது.நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க இயலாதவர்கள், தபால்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரர்கள் உதவியுடன் பயோமெட்ரிக் அல்லது ஸ்பேஸ் ஆர்.டி., செயலி வாயிலாக டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.இதற்கு சேவை கட்டணமாக, 70 ரூபாய் செலுத்த வேண்டும். இச்சேவையை பெற விரும்பும் அனைத்துத்துறை ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.மேலும், https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணைய முகவரி வாயிலாகவும், Postinfo செயலியை பதிவிறக்கம் செய்தும் கோரிக்கையை பதிவு செய்யலாம். இச்சேவையை வழங்க அனைத்து தபால் நிலையங்களிலும், நவ., 1 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.எனவே, மத்திய அரசு ஓய்வூதியர்கள் மட்டுமின்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வாயிலாக, ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியர்கள், ராணுவ ஓய்வூதியர்கள் மற்றும் இதர ஓய்வூதியர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் கைவிரல் ரேகை பதிவு மற்றும் முக அங்கீகாரம் வாயிலாக உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.