உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் -- பட்டம் வினாடி -- வினா போட்டி: வியக்க வைத்த பள்ளி மாணவ, மாணவியர்

 தினமலர் -- பட்டம் வினாடி -- வினா போட்டி: வியக்க வைத்த பள்ளி மாணவ, மாணவியர்

கோவை: 'பட்டம்' வினாடி- வினா போட்டியில், பள்ளி மாணவ, மாணவியரின் திறமை வியக்க வைத்தது. 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவ, மாணவியரின் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்தவும், பாடங்கள் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், வினாடி- வினா நடத்தப்படுகிறது.ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், முதற்சுற்றில் 50 பேர் பங்கேற்றனர். 'எப்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி கோவர்த்தனி, ஏழாம் வகுப்பு மாணவி தீக் ஷா ஸ்ரீ ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்களுடன், 'பி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் தமிழ், ஆறாம் வகுப்பு மாணவர் அபிஷேக், 'இ' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி வள்ளியம்மாள், அபிநயா ஸ்ரீ, 'டி' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் கவுதம், ஏழாம் வகுப்பு மாணவர் ஹரிஷ், 'ஏ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஸ்ரீ கோகுல், எட்டாம் வகுப்பு மாணவர் கிருஷ்ணா ஹரி ஆகியோர், அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். வென்றவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சந்தான லட்சுமி பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் மதுரங்கா, ஸ்ரீஜெயந்தி, சுவர்ணலதா, அமுதா கலாராணி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டனர். * ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், முதற்சுற்றில் 55 பேர் பங்கேற்றனர். 'ஏ' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி தீபிகா, ஏழாம் வகுப்பு மாணவி அமோகா ஸ்ரீ முதலிடம் பெற்றனர். இவர்களுடன், 'எச்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியர் சுவாதி, அபியுவா, 'இ' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியர் தர்ஷனா, ஸ்ரீ அபிநயா, 'சி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியர் கமலி, கோபிகா ஸ்ரீ, 'எப்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியர் ஸ்ரீதேவி, காவ்யா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீகலா பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் அனிதா, மஞ்சு, சுமதி, சசிகலா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்