உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு

பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு

கோவை : கோவையில் நடந்த பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வில், எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 150 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். தீயணைப்புத்துறையில் மூன்று ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள், டிரைவர்கள், தொழில்நுட்ப பிரிவினர் பதவி உயர்வு பெறுவதற்கான எழுத்துத் தேர்வு, கோவை மண்டல தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை 8.00 மணிக்கு துவங்கிய தேர்வில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேர்முகத்தேர்வும் நடந்தது. தீயணைப்புத்துறை இணை இயக்குனர் ஜெயகாந்தன் எழுத்துத் தேர்வை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை