உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெலுங்கு கூட்டமைப்பு நாளை சந்திப்பு

தெலுங்கு கூட்டமைப்பு நாளை சந்திப்பு

கோவை :உலக தெலுங்கு கூட்டமைப்பின் கோவை மண்டல கிளை சார்பில், நான்காவது சிறப்பு சந்திப்பு நாளை ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடக்கிறது.கூட்டமைப்பின் கோவை மண்டல தலைவர் ரமா விஜயகுமார் கூறியதாவது: கூட்டமைப்பின் கோவை மண்டல பிரிவு, தெலுங்கு மக்களின் கலை, இலக்கியம், கலாசாரத்தை மேம்படுத்த 2003ல் ஆண்டு துவங்கப்பட்டது. நடப்பாண்டிற்கான நான்காவது சிறப்பு சந்திப்பு ஆக., 27 ல் (நாளை) நடக்கிறது. உலக தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் இந்திரா தத், ஆந்திர மாநில சுரங்கத்துறை அமைச்சர் காலா அருணாகுமாரி, ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதி ரகுராம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். அன்றைய தினம் காலை 9.00 முதல் மதியம் 12.00 மணி வரை இலவச பொது மருத்து முகாம், ராமகிருஷ்ணா மருத்துவமனையால் நடத்தப்படுகிறது. இதன் பின், தெலுங்கு இன மக்களின் கலாசார கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ