உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் வியாபாரிகள் கூட்டமைப்பு வைத்த போஸ்டர்

வால்பாறையில் வியாபாரிகள் கூட்டமைப்பு வைத்த போஸ்டர்

வால்பாறை : வால்பாறை டவுன் பகுதியில் வியாபாரிகள் கூட்டமைப்பு வைத்துள்ள போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வால்பாறையில் சமீபகாலமாக வனவிலங்கு தொல்லையாலும், ஆரம்பத்தில் குறைவான சம்பளம் வழங்கப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இதனால் பெரும்பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதோடு, வனவிலங்குகளின் பிடியில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலையும் உருவாகியுள்ளது.இந்நிலையில் வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி வைக்கப்பட்டுள்ள போஸ்டரில், வால்பாறையிலிருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறாமல் இருக்க புதிய மாற்றுத்தொழில் ஏற்படுத்த வேண்டும், வால்பாறை மீண்டும் வளம் பெற வனவிலங்குகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை