உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /   தினமலர் பள்ளி வழிகாட்டி 2026 பெற்றோருக்கு உதவ 2 நாள் நிகழ்ச்சி

  தினமலர் பள்ளி வழிகாட்டி 2026 பெற்றோருக்கு உதவ 2 நாள் நிகழ்ச்சி

கோவை: குழந்தைகள் படிக்க சிறந்த பள்ளியை தேர்ந்தெடுக்க, பெற்றோருக்கு உதவும் வகையில், 'தினமலர்' நாளிதழின் 'பள்ளி வழிகாட்டி 2026' நிகழ்ச்சி, 3, 4 தேதிகளில் நடக்கிறது. பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வியை சிறப்பான அடித்தளத்துடன் அமைத்து தர வேண்டும்; ஆனால், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளியா, விளையாட்டுக்கு முன்னுரிமை தரும் பள்ளியா என்ற தேடலில் இருக்கும் பெற்றோர்களுக்கு, இந்த நிகழ்ச்சி ஒரு தீர்வாக அமையும். 'தினமலர்' நாளிதழுடன், எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றன. அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில், காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். நேஷனல் மாடல் பள்ளி இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது. அத்வைத் அகாடமி மற்றும் மான்செஸ்டர் சர்வதேசப் பள்ளி ஆகியவை, இணை ஸ்பான்சர்களாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை