மேலும் செய்திகள்
ஆயுதப்படை போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி
23-May-2025
பொள்ளாச்சி; ஆனைமலை அருகே, ஆழியாறு அணைப்பகுதியில், 60 போலீசாருக்கு பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில், திடீரென வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து, போலீசாருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.கூடுதல் காவல்துறை இயக்குனர் செயலாக்கம் உத்தவரப்பட்டி, தமிழ்நாடு அதிதீவிர பயிற்சி பள்ளி எஸ்.பி., வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 60 போலீசாருக்கு மூன்று நாள் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது.காமண்டோ பயிற்சி பள்ளி சப் - இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் மூன்று பயிற்றுநர்கள் தலைமையிலான குழுவினர், ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு செயல்விளக்கம் செய்து காட்டினர்.முதலுதவி, தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்பது மற்றும் விபத்துகளில் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும். புயல், மழை காலங்களில் ரோடுகளில் மரங்கள் சாய்ந்தால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மரங்களை வெட்டும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கப்பட்டது.மேலும், அடிப்படை பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆயுதப்படை டி.எஸ்.பி., வாயிலாக தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு, பயிற்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
23-May-2025