மேலும் செய்திகள்
கொள்முதல் விலை சரிவு; மரவள்ளி விவசாயிகள் தவிப்பு
30-May-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் மரவள்ளி பயிரில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்த, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், மரவள்ளி கிழங்கு ஆண்டு தோறும், 90 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படுகிறது. மரவள்ளியின் இலைகள் நிறம் மாறி காய்ந்த நிலையில் இருப்பதால், மகசூல் குறைய வாய்ப்புள்ளது.இதை தவிர்க்க, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார். மரவள்ளி பயிரில் இலைகள் மற்றும் தண்டு பகுதி வெண் நிறமாக இருக்க நுண்ணூட்ட சத்து மற்றும் இரும்பு சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் குறைபாடே காரணமாகும்.இதை சரி செய்ய, பயிருக்கு தேவையான நுண்ணூட்டம் அளிக்க வேண்டும். மேலும், சிலந்தி பூச்சியை கட்டுப்படுத்த பெகாசிஸ் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில், 2.5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்கள், வேம்பு சார்ந்த பூச்சி விரட்டியை பயன்படுத்த வேண்டும், என, தெரித்தார்.
30-May-2025