உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுரைக்காயில் நோய் தாக்கம்; கட்டுப்படுத்த ஆலோசனை

சுரைக்காயில் நோய் தாக்கம்; கட்டுப்படுத்த ஆலோசனை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் சுரக்காய் சாகுபடியில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், பரவலாக, 10 ஹெக்டேர் அளவில் ஆண்டுதோறும் சுரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சுரக்காய் பயிரின் தண்டில் சாறு வடிதல் நோய் ஆங்காங்கே காணப்படுகிறது.இதைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில் என்ற பூஞ்சான கொல்லி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில், 2 கிராம் கலந்து, தெளித்து கட்டுப்படுத்தலாம். நோயின் தன்மையைப் பொறுத்து ஏழு நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிக்க வேண்டும். இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ