வால்பாறை:வால்பாறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டில் நடமாடும் கால்நடைகளை கட்டுபடுத்த, நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.வால்பாறையில், சமீப காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் ஆடு, மாடு, நாய் போன்றவை நடமாடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி தவிக்க வேண்டியநிலை நீடித்து வருகிறது.சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் அங்கு, உலா வரும் கால்நடைகளால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகளால் விபத்துக்குள்ளாகின்றனர்.இது குறித்து, பல முறை புகார் தெரிவித்தும், நகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் நகராட்சி அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.மக்கள் கூறியதாவது:வால்பாறை நகர், ரொட்டிக்கடை, உருளிக்கல் பெரியார் நகர், சோலையாறுடேம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும், இடையூறாக ரோட்டில் நடமாடும் கால்நடைகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று, பல்வேறு அமைப்புக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அதிகாரிகள் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக, ரோட்டில் நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.