உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., விவசாய அணி சார்பில் தேங்காய் எண்ணெய் வழங்கல்

பா.ஜ., விவசாய அணி சார்பில் தேங்காய் எண்ணெய் வழங்கல்

பொள்ளாச்சி;திருப்பூர் தெற்கு மாவட்டம் பா.ஜ., விவசாய அணி சார்பில், ரேஷன் கார்டுக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கும் விழா, பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் நடந்தது. விவசாய அணி பொதுச் செயலாளர் செல்வபிரபு வரவேற்றார்.மாநில துணைத்தலைவர் குமரேசன், மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட தலைவர் ரவி, மாநில செயலாளர் மவுனகுருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசியதாவது:தமிழகத்தில், ஐந்து கோடி தென்னை மரங்கள் உள்ளன. ஆனால், பாமாயில் இறக்குமதி செய்து வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், ரேஷன் கடைகளில் வினியோகிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும், தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; வறுமை ஒழிக்கப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடியால், இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. மற்ற கட்சிகள் போன்று பா.ஜ., அல்ல; மக்கள் நலப்பணிகளுக்காக உள்ள கட்சியாகும். தமிழகத்தை காப்பாற்ற பா.ஜ.,வால் தான் முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்ந்து, 882 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ