உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட வேளாண் அதிகாரிகள் விதைப்பண்ணையில் கள ஆய்வு

மாவட்ட வேளாண் அதிகாரிகள் விதைப்பண்ணையில் கள ஆய்வு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், வேளாண் துறை சார்பில் மாவட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள வேளாண் திட்டங்களை, மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.இதில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தில் கோவிந்தாபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சோளம் செயல்விளக்க திடலை ஆய்வு செய்தனர்.மேலும், சிறுகளந்தை, ஜக்கர்பாளையத்தில் தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், பயிர் வகை திட்டத்தில், கொண்டக்கடலை செயல்விளக்கத் திடல் மற்றும் விதைப்பண்ணையை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, மெட்டுவாவியில் தட்டைப்பயிறு விதைப்பண்ணை ஆய்வு மற்றும் வடசித்தூரில் கொள்ளு, கம்பு செயல்விளக்க திடல் மற்றும் விதைப் பண்ணையை ஆய்வு மேற்கொண்டனர். கிணத்துக்கடவு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு ஆடாதொடை மற்றும் நொச்சி கன்றுகள் வழங்கப்பட்டது.சிறுதானிய சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் புனிதா, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார், துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை