மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி; விக்கெட்கள் வீழ்த்தி திணறடித்த வீரர்கள்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் ஆறாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்.வி.சி.சி., அணியும் மோதின.பேட்டிங் செய்த ஆரிஜின் ரீஜனல் கிரிக்கெட் கிளப் அணி, 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 203 ரன்கள் எடுத்தது. வீரர்கள் ஆதித்யா, 39 ரன்களும், ஸ்ரீவரதனா, 36 ரன்களும், யாஷ் ஜெயின், 30 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் சஞ்சய்குமார் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா அணியினர், 38 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் ஸ்ரீராம் 51 ரன்களும், சுந்தர் ராஜ், 40 ரன்களும், சத்தியநாராயணன் 30 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் ஜனார்தன் பாலாஜி நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.நான்காவது டிவிஷன் போட்டியில், சேம் கிரிக்கெட் அகாடமி அணியும், மிராக்கில் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த சேம் கிரிக்கெட் அகாடமி அணியினர், 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 211 ரன்கள் எடுத்தனர்.வீரர் சுரேஷ், 80 ரன்களும், சூர்ய பிரகாஷ், 32 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் கிஷோர் குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். மிராக்கில் கிரிக்கெட் கிளப் அணியினரோ, 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 120 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.வீரர்கள் ராகுல் பிரணாவ், 39 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர்கள் வெங்கடேஷ், நிஷாந்த் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.