துணை கமிஷனராக திவ்யா நியமனம்
கோவை; கோவை மாநகர தலைமையிட போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றியவர் சுகாசினி. இவர், சென்னை மேற்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கோவை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டு, கோவை தலைமையிட போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.