உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

கோவை,: கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் பராமரிக்கப்படும், மாநகராட்சிக்குச் சொந்தமான, ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.ஆர்.எஸ்.புரம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் 65 பேர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்கள், தங்கள் வாரிசுகளால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவின்றி தெருக்களில் தவித்து வந்தவர்கள். இவர்கள் மீட்கப்பட்டு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர்.இவர்களுடன் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் நேற்று தீபாவளி கொண்டாடினர். நன்கொடையாளர்கள் ஆதரவுடன் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இனிப்புடன் சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டன. அனைவரும் பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன், அறக்கட்டளை உறுப்பினர்கள், முதியோர் இல்ல பராமரிப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ