உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  டி.என்.ஏ.ஆய்வக கட்டுமானம் விறுவிறு குற்ற வழக்குகளில் உடனே கிடைத்து விடும் தீர்வு

 டி.என்.ஏ.ஆய்வக கட்டுமானம் விறுவிறு குற்ற வழக்குகளில் உடனே கிடைத்து விடும் தீர்வு

கோவை: மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் கடந்த ஓராண்டாக, டி.என்.ஏ., ஆய்வக கட்டுமான பணி நடந்து வருகிறது. இயந்திரங்கள் பொருத்தும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இந்த ஆய்வகம் வந்து விட்டால், சிக்கலான வழக்குகளுக்கா ன பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைத்து விடும். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் செயல்படும், வட்டார தடயவியல் அலுவலகத்தில் நஞ்சியியல் பிரிவு, போதை பொருள் பிரிவு, மதுவிலக்கு பிரிவு, கணினி தடயவியல் உள்ளிட்ட ஏழு பிரிவுகள் செயல்படுகின்றன. தற்போது, கூடுதலாக டி.என்.ஏ., ஆய்வகம் 7.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. போக்சோ வழக்குகள், சந்தேக மரணங்கள், சிக்கலான பிரேத பரிசோதனைகளில் டி.என்.ஏ., பரிசோதனை செய்யப்படுகிறது. கோவையில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ., மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. இதில், அதிக தாமதம் ஏற்படுவதால், பல வழக்குகளின் விசாரணை இழுபறியாகிறது. இந்நிலையில், கோவையிலேயே டி. என்.ஏ., ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. 960 சதுர அடியில், ஒரு குளிர்பதன அறை, ஒரு வாஷிங் அறை மற்றும் ஒரு ஹால் என்ற அமைப்பில் தரைத்தளம் கட்டப்பட்டுள்ளது. தவிர, பயன்பாட்டில் இருந்த இரண்டு அறைகள் புதுப்பிக்கப்பட்டு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டார தடயவியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இயந்திரம் பொருத்தும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. மூன்று மாதங்களில் பணிகள் முழுமை பெறும். பணிகள் முடிந்ததும், மேற்கு மண்டல மாவட்டங்களின் டி.என்.ஏ., சார்ந்த பரிசோதனைகள் இங்கேயே மேற்கொள்ளப்படும்' என்றார். இனி சிக்கலான வழக்குகளில், தீர்வு உடனுக்குடன் கிடைக்கும் என நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ