மாநகராட்சி அறிவுசார் மையத்துக்கு அள்ளிக்கொடுத்தனர் நன்கொடை
கோவை; கோவை மாநகராட்சி பொது அறிவுசார் மையம் மற்றும் நகர நுாலகத்திர்க்கு, கோவை இன்னர்வீல் கிளப் சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன.இன்னர் வீல் கிளப் நிர்வாகி கீதா பத்மநாபன் கூறுகையில், ''எங்கள் கிளப் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல சேவைகள் செய்து வருகிறோம். அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி மற்றும் நுாலக வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறோம். இந்த ஆண்டு இந்த மாநகராட்சி நுாலக அறிவு மையத்துக்கு, ரூ.25 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் 15 கம்ப்யூட்டர்கள் வழங்கி இருக்கிறோம். இந்த நுாலகத்தில் போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு, பயன்படும் நுால்களை வழங்கி இருக்கிறோம்,'' என்றார்.கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்னர்வீல் கிளம் தலைவர் ஜக்ருதி அஸ்வின், தலைவர் பல்குணா ஹரேஷ் பதானி செயலாளர் பினால் எஸ் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.